காதல் உறவால் மாணவி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது
காதல் உறவால், சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மஸ்கெலியா - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 15 வயதுடைய சிறுமியை 18 வயதுடைய இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காதல் உறவால், சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, மஸ்கெலியா பொலிஸார் இளைஞனையும், சிறுமியான மாணவியையும் கைது செய்தனர்.
அத்துடன், மாணவியை கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞன், ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் இன்று (24) ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.