நுவரெலியாவில் அரச வெசாக் நிகழ்வு - அறிவிப்பு வெளியானது
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரத் துறை ஆகியவை இணைந்து நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, வெசாக் வாரத்தை நடத்த முடிவு செய்துள்ளன.
"நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச வெசாக் விழாவை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா சர்வதேச பௌத்த மைய விகாரையை மையமாகக் கொண்டு ஒரு வார கால வெசாக் வாரத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் பௌத்த மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.