இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமைச்சரின் அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை ரூபாயின் பெறுமதியில் அதிகரித்து ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி படிப்படியாக வலுவடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியின் பலன்கள் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவில் வழங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.