தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவம். நீதிமன்ற உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த புறாக்கள் காணாமல் போனதால், பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நாகொடவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் 23 வயது இளைஞன் கைது. ஒற்றை தோட்டாவை சுடக்கூடிய தானியங்கி துப்பாக்கி பறிமுதல்.
கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர். காரை செலுத்திச் சென்ற பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் குணமடைந்தவுடன், அவரது பெற்றோர் கொழும்பு நீச்சல் கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 917 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் பிடியாணை பெற்ற 375 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார்.