50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். 

ஆகஸ்ட் 8, 2025 - 20:50
50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

கொழும்பில் வசித்து வரும் தினைஷ் மற்றும் சுதர்சினி தம்பதிகளின் 6 வயதான மகன் தினேஸ் ஹெதேவ்.  இவர் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார். 

சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வரும்  ஹெதேவ் இன்று சென்ட் பெனடிக்ட் கல்லூரியில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். 

இவரது இந்த முயற்சியைக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா போன்றோர் சிறுவனின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அவருக்குச் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!