வடக்கு

கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு - பலர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு - இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.

’டிக்-டாக்’ எடுக்கும்போது கடலில் விழுந்த யாழ். இளைஞன்

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக்-டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

மன்னார் போக்குவரத்து சபை சாரதிகள் பணி புறக்கணிப்பு

மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விபத்தில் 10 பேர் காயம்

விபத்தில் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.

பாடசாலை ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

நீரில் மூழ்கி யாழில் உயிரிழந்த கிளிநொச்சி யுவதி

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புளியம்பொக்கனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புளியம்பொக்கனை பகுதியில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழில் குதிரை வண்டி போக்குவரத்து

எரிபொருள் நெருக்கடியால் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக பாரம்பரிய குதிரை வண்டிகளை பயன்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

காணாமல் போன சிறுமி மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சிறுமி, கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் கைது

கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நொச்சிக்குளம் வாள்வெட்டு; சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.