வவுனியா விபத்தில் 10 பேர் காயம்

விபத்தில் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா விபத்தில் 10 பேர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை 5.30 மணியளவில்  விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

பஸ் - டிப்பர் மோதிக்கொண்ட இந்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த பயணிகள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பஸ் மற்றும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பர் என்பன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT