நீண்ட நாட்களின் பின் யாழில் தரையிறங்கிய இந்திய விமானம்

சென்னைக்கும் - பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று (12) ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது. 

நீண்ட நாட்களின் பின் யாழில் தரையிறங்கிய இந்திய விமானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சென்னைக்கும் - பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று (12) ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது. 

திங்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கும் விமான சேவைகள் நடத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அலயன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான இந்த விமான சேவைகளை நடத்தவுள்ளது.

இதற்கு முன்னர் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நடத்தப்பட்டதுடன் கொரோனா தொற்று பரவலை அடுத்து அந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT