மர்மமான முறையில் வவுனியாவில் மாடுகள் மரணம்

வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

மர்மமான முறையில் வவுனியாவில் மாடுகள் மரணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் அப்பிரதேசவாசிகளின் மாடுகள் சில உட்புகுந்து அங்குள்ள உழுந்து மற்றும் நெற் பயிர்களை மேய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனை கண்ணுற்ற விவயாய நில உரிமையாளர் ஆத்திரமடைந்து அம்மாடுகளிற்கு யூரியா மற்றும் பூச்சிகொள்ளி மருந்தையும் நீரில் கலந்து  குடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நீரை மாடுகள் பருகி உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மாடுகளும் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாக அக்கிராம கமக்கார அமைப்பினர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவம், தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார், நேரில் சென்று பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT