இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேலதிக விசாரணைக்காக நாளை (23) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 16ஆம் திகதி நீதிபதியொருவர் இந்த வழக்கிலிருந்து விலகியதையடுத்து, புதிய நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து புதிய நீதியரசர் குழுவொன்றை பெயரிடுவதற்காக இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழு நியமிக்கப்பட்டது.
இதனையடுத்து, இடைக்கால குழுவின் செயற்பாட்டைத் தடுத்து கடந்த 07 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாட்கள் தடை உத்தரவை பிறப்பித்தது.