மலையக ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும் அனைத்து ரயில்களையும் நானுஓயா வரை மட்டுமே இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை
நாளை (23) முதல் மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
கன மழை காரணமாக மலையக ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அனர்த்தங்கள் பதிவாகும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.