தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை
100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 மணித்தியாலங்கள் முதல் 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை அந்த திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவின் மேல் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்வான பகுதிகளின் சில பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் மற்றும் அப்பகுதியினூடாக செல்லும் வாகன சாரதிகள் வெள்ள எச்சரிக்கை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகள் உயிரிழப்பு