மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகள் உயிரிழப்பு
மண்சரிவில், இரண்டு யுவதிகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக என ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதியில் பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக அடுத்து ஏற்பட்ட மண்சரிவில், இரண்டு யுவதிகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹலி-எல உடுவர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே மண்திட்டு சரிந்து விழுந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இன்று பிற்பகல் மண்மேடு வீழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்குண்ட இரண்டு யுவதிகளும் மீட்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 மற்றும் 22 வயதுடைய யுவதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இந்த யுவதிகளும் படுக்கையறையில் கட்டிலில் படுத்திருந்தபோது, திடீரென வீட்டின் மீது மண்மேடு விழுந்து அதன் கீழ் புதையுண்டுள்ளனர்.
இந்த நிலையில், அறை முழுவதும் மண்ணால் மூடப்பட்டிருப்பதை கண்ட குடும்பத்தினர் அயலவர்களுடன் இணைந்து இருவரையும் மீட்டு வைத்திசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது