அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் கொடுப்பனவு

வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாயை ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 25, 2023 - 13:56
அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் கொடுப்பனவு

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாயை ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது. அதில் 5,000 ரூபாயை அடுத்த ஏப்ரல் மாதத்திலும் மீதித் தொகையை ஒக்டோபர் மாதத்திலும் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: உயர்தர மாணவர்களுக்கு வரவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு

அத்துடன், ஏப்ரல் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கவும் வரவு - செலவுத் திட்டத்தில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உரிய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் ஒரு பகுதியை வழங்குவது குறித்தும், ஜனவரி மாதம் முதல் 5,000 ரூபாயும், ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக 10,000 ரூபாயை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் 2003ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் நிதி நிலை அறிக்கையின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!