உயர்தர மாணவர்களுக்கு வரவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு

அடுத்து நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் இந்த பாடநெறிக்கான விண்ணப்பங்களை உடனடியாக கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர மாணவர்களுக்கு வரவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகம் என்பனவற்றுடன் இணைந்து இந்தப் பாடநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதையும் படிங்க: அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் கொடுப்பனவு

அடுத்து நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் இந்த பாடநெறிக்கான விண்ணப்பங்களை உடனடியாக கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான இரண்டு தொழில்நுட்ப பாடங்களைத் தெரிவு செய்து இந்தப் பாடநெறியைத் தொடரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரப் பெறுபேறுகள வெளியாகும் வரை 4 மாதங்கள் இந்தப் பாடத்திட்டத்தை மாணவர்கள் கற்க முடியும் என்றும், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள் தவிர ஏனைய மாணவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு பொருத்தமான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -