கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!
உற்பத்திக்கான செலவைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1150 ரூபாய்க்கு விற்பனை

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்திக்கான செலவைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்த விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் பொதுமக்கள் மிகவும் கரிசனையுடன் காணப்படுவதால் குறைந்தபட்ச விலையில் கோழி இறைச்சியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.