அரிசி, பருப்பு உட்பட பொருட்கள் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச குறைத்துள்ளது.

ஏப்ரல் 10, 2024 - 11:04
அரிசி, பருப்பு உட்பட பொருட்கள் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச குறைத்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பை மேற்கொண்டுள்ளதாக, லங்கா சதொச கூறியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாய் 300 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 850 ரூபாயாகும்.

 சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 375 ரூபாயாகும். 

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 445 ரூபாயாகும். 

ஒரு கிலோகிராம் வௌ்ளைபூடு 15 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 680 ரூபாயாகும். 

ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 10 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 165 ரூபாய் என, லங்கா சதொச தெரிவித்தது.

அத்துடன், மைசூர் பருப்பை 07 ரூபாயாலும் வெள்ளை அரிசியை 03 ரூபாயாலும் குறைக்கவுள்ளதாகவும், லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!