விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த மீண்டும் முட்டை இறக்குமதி
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள்களின் விலை குறைப்பினை அடுத்தும் இலங்கை சந்தையில் முட்டை விலை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக நுகர்வோர் விசனம் வெளியிடுகின்றனர்.