ஆசிய கோப்பை 2023 - சமநிலையில் நிறைவடைந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி
ஆசிய கோப்பை 2023: போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆசிய கோப்பை 2023: 2023 ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுக்கு வந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 87 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். இஷான் கிஷான் 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆசிய கோப்பை 2023 - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் அரைசதம்..!
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷா அப்ரிடி 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி, இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், மைதானத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய வீரருக்கு பாபர் அசாம் செய்த உதவி.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!