இந்திய வீரருக்கு பாபர் அசாம் செய்த உதவி.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருக்காது. களத்திலேயே இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்ட காலமெல்லாம் இருந்திருக்கிறது.
ஹர்பஜன் சிங் - சோயப் அக்தர், வெங்கடேஷ் பிரசாத் - ஆமீர் சோஹைல், கம்ரான் அக்மல் - கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் நேரடியாகவே மோதிக் கொண்டுள்ளனர்.
இவர்களை சமாதானம் செய்வதே பெரிய விஷயமாக இருக்கும். சின்ன சின்ன சீண்டல்களும் ஆட்டத்தின் அனலை அதிகரிக்க செய்யும். ஆனால் அண்மை காலங்களில் இந்தியா - பாகிஸ்தான் இரு அணி வீரர்களும் அதிக நட்புடன் பழகி வருகின்றனர்.
பாகிஸ்தான் ரசிகர்களும் கூட விராட் கோலிக்கு அவ்வளவு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனைகளை கடந்து, கிரிக்கெட் போட்டிகளை அவ்வளவு ரசித்து வருகிறார்கள்.
ஆனால் களத்திற்கு வெளியேற எவ்வளவு நட்புடன் இருந்தாலும், களத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் பரபரப்பு உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரின் 3வது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
அதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 87 ரன்களும் இஷான் கிஷன் 82 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது, அவரின் ஷூ லேஸ் திடீரென கழன்றது. அவர் கால்களில் பேடு கட்டியிருந்ததால், ஷூ லேஸ் கட்ட முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் உதவி கோரினார்.
அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எந்த ஈகோவும் பார்க்காமல் உடனடியாக ஹர்திக் பாண்டியாவுக்கு உதவி செய்தார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே அதிக பகிரப்பட்டு வருகிறது.