ஆசிய கோப்பை 2023 - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் அரைசதம்..!

ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஆசிய கோப்பை 2023 - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் அரைசதம்..!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 
இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லேகல ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்கத்தில் ரோகித் சர்மா 11 ரன்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி 4 ரன்களுக்கு , ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் கில் 10 ரன்களில் வெளியேறினார்.இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனை தொடர்ந்து இஷான் கிஷான் , ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 54 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT