இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பியோட்டம்!

ஓட்டலில் இரவு சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, கைதி ரியாஸ் கான் ரசாக் திடீரென ஓட்டலில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

மார்ச் 23, 2023 - 15:38
மார்ச் 23, 2023 - 15:39
இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பியோட்டம்!

விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திருகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை மதுரை மேற்குவாசல் காவல் நிலையப் பாஸ்போர்ட் வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, புழல் சிறைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது விக்கிரவாண்டி அருகே பேரணி என்ற இடத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஓட்டலில் இரவு சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, கைதி ரியாஸ் கான் ரசாக் திடீரென ஓட்டலில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

அதன்பின்னர் பாதுகாப்பு காவலர்கள் குற்றவாளியை தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் கிராமங்களில் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு இவரைக் கண்டால் 9498100490, 9498100485 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்திய ஊடகங்கள்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!