பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு... வெளியான தகவல்!

மூல பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2024 - 13:15
பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு... வெளியான தகவல்!

பேக்கரி உற்பத்திகளின் விலை 

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் வரிச்சலுகை வழங்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூல பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், பேக்கரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் சரியான வரிக் கொள்கையை பின்பற்றினால் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!