கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை குறைப்பு: வெளியான அறிவிப்பு
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 890 ரூபாய் ஆகும்.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த சில்லறை விலை 45 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக நாராஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 890 ரூபாய் ஆகும்.
மேலும், புதிய கோழி ஒரு கிலோகிராம் 1020 ரூபாய் என்றும் தோலுடன் கூடிய கோழி ஒரு கிலோகிராம் 970 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் உறைந்த கோழி இறைச்சி 970 ரூபாயாகும். அத்துடன், ஒரு கிலோகிராம் கறி கோழி 1100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும், ஒரு கிலோகிராம் ஆட்டு இறைச்சி 3400 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.