ரணிலுக்கு ஆதரவான பொதுஜன பெரமுனவினர் இணைந்து புதிய கட்சி!
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (20) இடம்பெற்றது.
இந்தப் புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் நிர்வாகிகள், நிர்வாக சபை மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து நீண்ட விவாதம் நடந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.