டுவைன் பிராவோ பிறந்தநாள் இன்று!
2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமான பிராவோ, 2006-ல் நியூசிலாந்துக்கு எதிராக டி20-யில் அறிமுகமானார்.

டி20 கிரிக்கெட்டின் மகத்தான ஆல்ரவுண்டராகக் கொண்டாடப்படும் டுவைன் பிராவோவின் பிறந்தநாள் இன்று.
2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமான பிராவோ, 2006-ல் நியூசிலாந்துக்கு எதிராக டி20-யில் அறிமுகமானார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்காக 40 டெஸ்டுகள், 164 ஒருநாள் மற்றும் 91 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைகளை வெல்ல பிராவோ முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
உலகம் முழுவதிலும் பல்வேறு லீக் போட்டிகளில் பிராவோ அளவிற்கு தொடர்ச்சியாக பங்கேற்றவர்கள் வெகு சிலரே.
சிஎஸ்கே அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த பிராவோ, ஐபிஎல் 2013 மற்றும் 2015 பருவங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
கடைசிக்கட்ட ஓவர்களில் குறைவேகப் பந்துகளால் பேட்டர்களைத் திணறடிக்கும் பிராவோ, டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஆவார்.
2021-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிராவோ, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் சிபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் பிராவோ தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.