பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
33(1) (அ) ஊதிய சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 136) பிரிவின் கீழ் தொழில் அமைச்சரின் உத்தரவின் மூலம், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.