முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டது
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு மீளப்பெறப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் 35 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.