நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து
இந்த விபத்து இரவு 8 மணியளவில் ரதெல்ல குறுக்கு வீதியில் நானுஓயா சமர்செட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இரவு 8 மணியளவில் ரதெல்ல குறுக்கு வீதியில் நானுஓயா சமர்செட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லொறியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வேககட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால் லொறியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை, லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ரதெல்ல குறுக்கு வீதியில் செல்லும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன், டி.சந்ரூ)