மீண்டும் இலங்கை வரும் ஜெய்சங்கர்
2023 ஜனவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்கு பயணித்ததுடன், உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை, இம்மாதம் 20ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை, இவ் விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கலாநிதி எஸ். ஜெய்சங்கர், கடந்தாண்டு 2023 ஜனவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்கு பயணித்ததுடன், உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.