நாடளாவிய ரீதியில் பாடசாலை விடுமுறை - அறிவிப்பு வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.

நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.
அத்துடன், முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி வரை நடைபெறும் என, அமைச்சு அறிவித்துள்ளது.