வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது எப்போது தெரியுமா?
அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி விகிதங்களையும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை பேணுவது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1949 ஆம் ஆண்டின் பணச் சட்டம் எண் 58 இன் கீழ் வெளியிடப்பட்ட ஆணை வட்டி விகிதங்கள் தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளது.
சராசரி கடன் வட்டி வீதத்தை 13.5 சதவீதமாக பேணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடமான வட்டி விகிதம் 18 சதவீதமாகவும், கிரெடிட் கார்டு வட்டி விகிதம் 28 சதவீதமாகவும் பராமரிக்கப்படும் என்று உரிமம் பெற்ற வங்கிகள் இதன் மூலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.