பிரியாணி, ரைஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்... அவதானமாக இருங்கள்!

நாட்டில் உள்ள பல பகுதிகளிலும் பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை தயாரிக்கும் போது அதிகமான நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நவம்பர் 17, 2023 - 22:21
பிரியாணி, ரைஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்... அவதானமாக இருங்கள்!

நாட்டில் உள்ள பல பகுதிகளிலும் பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை தயாரிக்கும் போது அதிகமான நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் தற்போது மக்களை கவர்கின்ற நிலையில், இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிறமிகள் சரியான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த வேண்டும் என சங்கத்தின் பொருளாளர் ரோஷன குமார தெரிவித்துள்ளார்.

யாழில் பிட்டு புரைக்கேறி இளைஞன் உயிரிழப்பு 

உணவுச் சட்டம் சந்தையில் பயன்படுத்தப்படும் வண்ணங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளதாக கூறிய அவர், இருப்பினும், ரோஸ்ட் சிக்கன், பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் வகைகள் தயாரிப்பதில் இந்த வண்ணங்களைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக உணவுக் கடைகளில் காணப்படுகிறதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!