35 ரூபாயாக குறைக்கப்பட்டது முட்டை விலை; இன்றிலிருந்து நடைமுறை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை தொடர்பில் வர்த்தக அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜுலை 25, 2023 - 18:45
ஜுலை 25, 2023 - 18:48
35 ரூபாயாக குறைக்கப்பட்டது முட்டை விலை; இன்றிலிருந்து நடைமுறை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை தொடர்பில் வர்த்தக அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 35 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

அத்துடன், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை  40 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும் என, அமைச்சர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகள் லங்கா சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளுக்கு இன்று (ஜூலை 25) முதல் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!