கொழும்பு என்னோட கோட்டை ராஜா.. 84 பந்துகளில் சதம்.. கிங் கோலினா சும்மாவா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பிரேமதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கீடு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக 4 மணி நேரம் மழை பெய்ததால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது.
இந்த நிலையில் 24.1 ஓவர்களுடன் இந்திய அணியின்ன் விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி ஆட்டத்தை தொடர்ந்தது.
எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்பதால், இந்திய அணி வீரர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கினர்.
ஒருபக்கம் கேஎல் ராகுல் பேட்டை வீச தொடங்கிய போது, விராட் கோலி நிதானம் காத்து வந்தார்.
அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, 30 ரன்களை கடந்த பின் பீஸ்ட் மோடில் ரன்களை சேர்க்க தொடங்கினார். இதன் காரணமாக இந்தப் போட்டியில் 55 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
ஹிட்மேன்னா சும்மாவா? கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
இதன் பின் விராட் கோலியின் ஆட்டம் அதிரடிக்கு மாறியது. ஒவ்வொரு ஓவருக்கும் டவுன் தி டிராக் இறங்கி வந்து பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இதன் காரணமாக 40 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.
தொடர்ந்து நசீம் ஷா பந்துவீச்சில் எம்சிஜி-யில் அடித்த சிக்சரை போல் மீண்டும் ஒரு மிரட்டல் சிக்சரை அடிக்க, ரசிகர்களே மிரண்டு போயினர்.
ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்சருமாய் பறக்க, 43வது ஓவரை வீசிய இஃப்திகார் அஹ்மத் பந்துவீச்சில் 16 ரன்களை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது விராட் கோலி 47வது சதமாகும்.
கொழும்பு மைதானத்தில் விராட் கோலி ஆடியுள்ள கடந்த மூன்று போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். தற்போது மீண்டும் சதம் விளாசி மிரட்டல் சாதனை படைத்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொழும்பு மைதானம் விராட் கோலியின் கோட்டை என்று வாழ்த்தி வருகின்றனர்.