ஹிட்மேன்னா சும்மாவா? கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

செப்டெம்பர் 11, 2023 - 22:16
ஹிட்மேன்னா சும்மாவா? கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட ரோஹித் சர்மா லீக் சுற்றின் போது தடுமாறிய நிலையில் சூப்பர் போர் சுற்றில் தம்மை ஏன் ரசிகர்கள் ஹிட்மேன் என்று கூறுகிறார்கள் என்பதை நிரூபித்து விட்டார்.

49 பந்துகளை எதிர் கொண்ட ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு இமாலய சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ரோகித் சர்மா பல சாதனைகளை உடைத்திருக்கிறார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.மேலும் ஆசிய கோப்பையில் ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

3 நாட்கள் ஓய்வில்லாமல் ஓடப்போகும் இந்திய வீரர்கள்.. ஜெய் ஷாவால் சிக்கிய ரோகித் சர்மா!

பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அவர் ஆறு முறை அரைசதம் அடித்திருக்கிறார். இதேபோன்று ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவர்லே சிக்ஸ் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மா படைத்திருக்கிறார். 

மேலும் முதல் ஓவரிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

15 சிக்சர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், ஒன்பது சிக்ஸர்களுடன் சேவாக் இரண்டாவது இடத்திலும், 5 சிக்ஸர்களுடன் இசான் கிஷன் மூன்றாவது இடத்திலும் மூன்று சிக்ஸர்களுடன் கே எல் ராகுல் நான்காவது இடத்திலும் உள்ளனர். 

இதனிடையே சிக்ஸர்களின் மன்னனாக கருதப்படும் கிறிஸ் கெயில் ரெக்கார்டையும் ரோகித் சர்மா முறியடித்து இருக்கிறார்.

கிறிஸ் கெயில் ஒரு ஆண்டில் 40 சிக்ஸர்கள் என இதுவரை ஐந்து முறை சாதனை படைத்திருக்கிறார். தற்போது இதனை ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார். 

ரோகித் சர்மா ஒரு ஆண்டில் 40 சிக்சர்கள் என ஆறு முறை இத்தகைய சாதனையை நிகழ்த்தி முதல் இடம் பிடித்திருக்கிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!