இந்திய அணிக்கு கொல்கத்தாவில் காத்திருக்கும் ஆபத்து.. அரையிறுதி மும்பையில் நடந்தால் தான் நல்லது.. ஏன்?

மும்பையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு டாஸ் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முதலில் பேட்டிங் செய்தாலும் இல்லை பந்து வீசினாலும் இந்தியாவுக்கு அது சாதகமாக தான் இருக்கும். 

நவம்பர் 6, 2023 - 17:46
இந்திய அணிக்கு கொல்கத்தாவில் காத்திருக்கும் ஆபத்து.. அரையிறுதி மும்பையில் நடந்தால் தான் நல்லது.. ஏன்?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து கொண்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடராக அரை இறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று பலமாக இருக்கிறது. இதனால் அரை இறுதியில் கடந்த முறை மாதிரி இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி அரை இறுதியில் தற்போது முதல் இடத்தில் இருப்பதால் மும்பையில் தான் விளையாடப் போகிறது. ஆனால் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் இந்தியா விளையாட முற்பட்டால் கொல்கத்தாவில் இந்திய அணி அரையிறுதியில் விளையாடும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதனால் தற்போது மும்பையில் விளையாடுவது நல்லதா இல்லை கொல்கத்தாவில் விளையாடுவது நல்லதா என்பதை தற்போது பார்க்கலாம்.

மும்பையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு டாஸ் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முதலில் பேட்டிங் செய்தாலும் இல்லை பந்து வீசினாலும் இந்தியாவுக்கு அது சாதகமாக தான் இருக்கும். 

ஆனால் கொல்கத்தாவில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறும் வகையில் ஆடுகளம் இருக்கிறது. இரண்டாவதாக பேட்டிங் செய்தால் நிச்சயம் தோல்வி உறுதி.

இதன் காரணமாக கொல்கத்தாவில் டாஸ் மிகப்பெரிய பங்கை வகிக்கும். இப்படி ஒரு சூழலில் அரை இறுதியில் இந்திய அணி இரண்டாவதாக பந்து வீசும் வகையில் சூழல் வந்தால் அது மிகப் பெரிய பாதிப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்தும். 

ஏற்கனவே 1996 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் தான் இந்தியா அரை இறுதி போட்டியில் விளையாடி இலங்கை இடம் படுதோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டத்தில் கூட டாஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்பதை நாம் பார்த்தோம். பலமாய்ந்து தென்னாப்பிரிக்க அணி கூட 100 ரன்களை கூட தொட முடியாத அளவு ஆடுகளம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது மோசமாக மாறியது. 

இதன் மூலம் இந்திய அணி அரையிறுதியை மும்பையில் விளையாடினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இல்லையென்றால் கொல்கத்தாவில் விளையாடும்போது டாஸ் மிகப்பெரிய காரணமாக அமைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!