பந்தை பிடிக்க சொன்ன தடவுறீங்க.. இஷான் கிஷனால் கோபமடைந்த ஜடேஜா!

இஷான் கிஷன் இருக்கும் போதும் கேஎல் ராகுலுக்கு கிளவுஸை கொடுத்திருப்பதால், அவரை விக்கெட் கீப்பராகவே தொடர் இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

Sep 13, 2023 - 07:19
பந்தை பிடிக்க சொன்ன தடவுறீங்க.. இஷான் கிஷனால் கோபமடைந்த ஜடேஜா!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான இஷான் கிஷன், ஃபீல்டிங் நிற்கையில் சொதப்புவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 379 கேட்ச்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 417 கேட்ச்களையும் பிடித்து சாதனை படைத்தவர். 

இதே கில்கிறிஸ்டை ஃபீல்டராக நிற்க வைத்தால் கையில் கொடுக்கப்படும் கேட்சை கூட தவறவிடுவார். விக்கெட் கீப்பர்களுக்கு ஏற்படும் பிரச்னையில் இதுவும் ஒன்றாகும்.

அந்த வகையில் இஷான் கிஷனும் கில்கிறிஸ்ட்டை போல் ஃபீல்டிங்கை சொதப்பி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்பட்டு வருகிறார். 

இஷான் கிஷன் இருக்கும் போதும் கேஎல் ராகுலுக்கு கிளவுஸை கொடுத்திருப்பதால், அவரை விக்கெட் கீப்பராகவே தொடர் இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா வீசிய பந்தில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அசலங்கா டீப் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடித்தார்.

அது டாப் அட்ஜாகி மேல் எழுந்த நிலையில், அதனை பிடிக்க இளம் வீரர் இஷான் கிஷன் ஓடி வந்தார். பந்து சரியாக கைகளில் விழுந்தும், அந்த கேட்ச்சை இஷான் கிஷனால் பிடிக்க முடியவில்லை.

இதனை நிதானமாக பார்த்துக் கொண்டிருந்த ஜடேஜா, இஷான் கிஷன் கேட்ச் விட்டதை பார்த்தும் ஏமாற்றத்தை வெளிப்படையாக தெரிவித்தார். இஷான் கிஷனை பார்த்து இன்னும் வேகமாக ஓடி வந்திருக்க வேண்டும் என்று ஜடேஜா சைகை செய்தார். 

தனியாளாக போராடிய வெல்லாலகே.. குல்தீப் சுழலில் சுருண்ட இலங்கை! 

இதனால் இஷான் கிஷன் முகத்தில் பதற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது. விக்கெட் கீப்பராக பாய்ந்து பாய்ந்து கேட்ச் பிடித்த இஷான் கிஷன், ஃபீல்டராக சொதப்புவது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது.

ஆனால் மறுமுனையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வருகிறார். இதுவரை 3 கேட்ச் மற்றும் ஒரு அற்புதமான ஸ்டம்பிங் என்று காயத்தில் இருந்து மீண்டு வந்த ராகுல், மிரட்டலாக ஆடி வருகிறார். 

இதனால் இஷான் கிஷன் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.