35 ரூபாய்க்கு இறக்குமதி முட்டை...வெளியான தகவல்!
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் ஒரு முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் முட்டை விலையை உயர்த்தினால், அரசாங்கத்தின் பதிலில் மாற்றம் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.