போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் மேல் மாகாண தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.
இதையும் படிங்க: யாழ்ப்பாணம் வரும் இந்திய பிரபலங்கள்: வெளியான தகவல்!
இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லோக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, பத்தரமுல்லை, கல்கிஸ்ஸை, நுகேகொடை மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்களில் 24 மணிநேரமும் தண்டப்பணம் செலுத்த முடியும்.