அஸ்வின் என்ன தப்பு செய்தார்? ரோஹித் சர்மா முடிவு குறித்து பொங்கிய கவாஸ்கர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய நினைத்த இந்திய அணி, அஸ்வினை நீக்கியது. அதே போல, அஸ்வினை நீக்கும் முடிவை எடுத்தாலும் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியை தேர்வு செய்யாமல் விட்டதும் தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாக கூறி இருக்கிறார்.
உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடியது. அந்தப் போட்டியில் இந்தியா மூன்று ஸ்பின்னர்களை ஆட வைத்தது. அதில் அஸ்வினும் ஒருவர். அவர் அப்போது 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது கேப்டன் ரோஹித் சர்மா அணியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்றார்.
அப்போதே ரசிகர்கள் பலர் தாக்குருக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அப்போது தொலைக்காட்சி வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், அஸ்வின் நீக்கம் குறித்து தன் விமர்சனத்தை முன் வைத்தார்.
"அஸ்வின் என்ன தவறு செய்தார் என்றே எனக்கு தெரியவில்லை. அணியை விட்டு நீக்குவது அவருக்கு பழகிப் போன ஒன்று தான்" என கவாஸ்கர், ரோஹித் சர்மா அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதில்லை என குத்திக் காட்டி பேசினார்.
முன்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. அதையும் சேர்த்தே இப்போது குத்திக் காட்டி இருக்கிறார் கவாஸ்கர்.
மேலும், வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என அஸ்வினை நீக்கினால், ஏன் சிறந்த பந்துவீச்சாளரான ஷமியை தேர்வு செய்யாமல் ஷர்துல் தாக்குரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் தன் வியப்பை வெளிப்படுத்தினார்.