மனைவி கொலை; ஆயுதத்துடன் பொலிஸில் சரணடைந்த கணவன்
குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்துவத்தை தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குருந்துவத்தை தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருந்துவத்தை தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.