ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் (12) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், முன்னதாக மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக சப்ரகமு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.