ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தும் இந்தியா தோல்வி.... ஹர்திக் செய்த மெகா தவறு!
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெளியேற, கைல் மெயர்ஸ் 15 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிய போது நிக்கோலஸ் பூரான் பட்டையை கிளப்பினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. கயானாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் அப்படி எந்த ஒரு நல்ல வியத்தையும் செய்யவில்லை.
இந்திய அணியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாட முற்பட்டு 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னில் ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு இஷான் கிஷன் 27 ரன்களில் வெளியேற தனியாக நின்ற திலக் வருமா அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.
இதில் ஐந்து பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 24 ரன்கள் சேர்த்தார்.
ஒரேயொரு அட்வைஸ்.. வீரரின் கிரிக்கெட் வாழ்வில் ஒளியேற்றிய விராட் கோலி!
இதேபோன்று அக்சர் பட்டேலும் 14 ரன்களில் வெளியேற ரவி பிஸ்னாய் 8 ரன்களிலும் ஆர்ஸ்தீப் சிங் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 7 ரன்கள் எக்ஸ்ட்ராவுக்கு கொடுத்திருந்தார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை அன்சாரி ஜோசப், அகில் உசேன், ரோமேரியோ ஷிபர்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெளியேற, கைல் மெயர்ஸ் 15 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறிய போது நிக்கோலஸ் பூரான் பட்டையை கிளப்பினார்.
பவர்பிளேவில் ரவி பிஸ்னாய் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து பூரானும், கேப்டன் போவெலும் அதிரடியை காட்ட, வெஸ்ட் இண்டீஸ் வெற்றியின் அருகே சென்றது. அப்போது பூரான் 67 ரன்களிலும், போவெல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா மீண்டும் போட்டிக்குள் வந்தது.
இதே போன்று சாஹல் வீசிய 16வது ஓவரில் 2 விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் என 3 விக்கெட்டுகள் விழுந்தது. இதனையடுத்து இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா மீண்டும் கிறுக்கு தனமாக முடிவு எடுத்தார்.
18வது ஓவரை சாஹல் வீச வந்தார். அப்போது, அவரிடம் பந்தை வாங்கி ஆர்ஸ்தீப் சிங்கிடம் ஹர்திக் கொடுத்தார். இதனையடுத்து கைவசம் 2 விக்கெட் இருக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகேல் ஹூசைன் மற்றும் அல்சாரி ஜோசப், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை பவுண்டரி சிக்சர் என பறக்கவிட்டு வெற்றி பெற வைத்தனர்.
சிறப்பாக பந்துவீசிய சாஹலுக்கு 3 ஓவரும், அக்சர் பட்டேலுக்கு ஓவரும் வழங்காமலும் ஹர்திக் செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.