ஒரேயொரு அட்வைஸ்.. வீரரின் கிரிக்கெட் வாழ்வில் ஒளியேற்றிய விராட் கோலி!
அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார்.

அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் வழிகாட்டியதை அனைவருமே கண்கூடாக பார்த்து வியந்தோம்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ஏராளமான இளம் வீரர்கள் விராட் கோலியை சுற்றி நின்று பேசுவார்கள். அனைவருடனும் நிதானமாக பேசும் விராட் கோலி, அவர்களுக்கு பேட்டிங் குறித்து நுணுக்கங்களை கூறுவதாக சொல்லப்பட்டு வந்தது.
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையி, ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கிட்டத்தட்ட 8 வீரர்களை விராட் கோலி சுற்றி நின்றார்கள்.
அவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு 30 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி குறித்த ஒரு வகுப்பையே விராட் கோலி எடுத்தார் என்று கூறி இருந்தார்.
அனைத்து நாடுகளிலும் மரபு ரீதியான டெக்னிக்கை வைத்து விளாசிய விராட் கோலியின் வார்த்தைகளால் தான் இளம் வீரர் ரியான் பராக்கும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.
விராட் கோலி கொடுத்த அட்வைஸ் பற்றி ரியான் பராக் பேசுகையில், 6 மாதமாக நான் ஒரு அணுகுமுறையை பின்பற்றி வெற்றிபெறும் போது திடீரென வரும் சில தோல்விகளால், அந்த அணுகுமுறை தவறாகிடாது.
ஐபிஎல் போன்று வேகமாக நடக்கும் தொடர்களில், இரு போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினாலே நம் திறமை மீது நாமே சந்தேகப்படுவோம். இங்கே அனைவரும் தவறு செய்கிறார்கள். நானும் டன் கணக்கில் தவறு செய்திருக்கிறேன்.
2 அல்லது 3 போட்டிகளில் மோசமாக விளையாடியதால், நம் அணுகுமுறை மற்றும் பயிற்சி முறைகளை மாற்ற வேண்டிய தேவையில்லை.
உண்மை என்னவென்று பார்த்துவிட்டு, இது மோசமான காலகட்டம் என்பதை ஒப்புக்கொள். ஆனால் அதற்காக அணுகுமுறையில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையே இல்லை என்று கூறியுள்ளார்.
விராட் கோலி அட்வைஸ் ரியான் பராக் வாழ்க்கையில் ஒளியாக அமைந்துள்ளது. அண்மையில் முடிவடைந்த தியோதர் டிராபியில் 5 போட்டிகளில் விளையாடிய ரியான் பராக், 354 ரன்கள் விளாசியதோடு 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் நட்சத்திர ஆல்ரவுண்டராக ரியான் பராக் மாறியுள்ளார்.