படிப்படியாக அதிகரிக்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டில் உள்ள பல நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாலை வேளையில் பலத்த மழை பெய்து வருவதாகவும், இந்த நிலைமைகள் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதனையடுத்து, மேலதிக நீரைநீர் மின் உற்பத்தி செய்யும் நீர்மின் நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.