அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (23) சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்து, ரூ.53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (23) சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்து, ரூ.53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (22) ஒரு கிராம் தங்கம் ரூ.6,845க்கும், சவரன் ரூ.55,760க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.145 குறைந்து, ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,160 குறைந்து, ரூ.56,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து, ரூ.7,170க்கும், சவரன் ரூ.1,160 குறைந்து ரூ.57,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து, ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,500 குறைந்து ரூ.86,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.