இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை - வெளியான முக்கிய தகவல்!
இன்று (16) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (16) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,160 ரூபாயாக உள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,300 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,070 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,550 ரூபாயாகவும் காணப்படுகிறது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,020 ரூபாயாகவும் , 21 கரட் 8 கிராம் தங்கம் 176,150 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலையானது இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இதன் பின்னர் தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.