வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இலங்கையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,906 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் ஒன்று 25,190 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுண் 201,500 ரூபாயாக உள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,100 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 184,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,050 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 176,350 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்று ஜூன் 22ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,780கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,554க்கும் ஒரு சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்குரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.98.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.