திடீரென சரிந்த தங்கம் விலை… குஷியில் நகைப்பிரியர்கள்!
மே மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. எனவே, மே மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விலை குறையுமா என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சரவனுக்கு ரூ.360 குறைந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 45 குறைந்து ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,600 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,200ஆக உள்ளது.
வெள்ளி விலை: அதேபோல, வெள்ளி கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து ரூ.101.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.101,000 விற்பனை செய்யப்படுகிறது.